ஆசிய விளையாட்டு ஸ்குவாஷ் போட்டியில் வெண்கலம் வென்றது இந்தியா
#India
#sports
#2023
#Player
#Breakingnews
#Sports News
#AsiaCup
Mani
2 years ago
சீனாவின் ஹாங்சோவ் நகரில் நடைபெற்று வரும் 19வது ஆசிய விளையாட்டுப் போட்டியில் 45 நாடுகளை சேர்ந்த 12,400 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.
இந்நிலையில், இன்று நடைபெற்ற ஸ்குவாஷ் கலப்பு இரட்டையர் பிரிவு அரையிறுதி ஆட்டத்தில் இந்தியாவின் அனாகத் சிங், அபய் சிங் ஜோடி 2-1 என்ற கணக்கில் மலேசியா அணியிடம் தோற்றது. இதன்மூலம் இந்திய அணிக்கு வெண்கல பதக்கம் கிடைத்தது.
இந்திய அணி இதுவரை 16 தங்கம், 26 வெள்ளி, 30 வெண்கலம் என மொத்தம் 72 பதக்கங்களைக் குவித்துள்ளது.