கேரளாவில் தொடர்ந்து 5 நாட்களுக்கு கனமழை பெய்யும் என்றும், திருவனந்தபுரத்திற்கு ஆரஞ்சு அலர்ட்
#India
#Rain
#HeavyRain
#2023
#Tamilnews
#Kerala
#ImportantNews
#Cyclone
Mani
2 years ago
கேரளாவில் 5 நாட்களுக்கு கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்த கனமழையின் எதிரொலியாக திருவனந்தபுரத்தில் ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
மேலும் கொல்லம், பத்தனந்திட்டா,ஆலப்புழா மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கையும் விடப்பட்டுள்ளது. இதனால் திருவனந்தபுரம் மற்றும் பத்தனந்திட்டா ஆகிய மாவட்டங்களில் உள்ள ஆறுகளின் நீர்மட்டம் உயரும் என்றும் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
மேலும், பலத்த காற்றுடன் மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, கேரளா மற்றும் லட்சத்தீவு கடல் பகுதிகளுக்கு மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்வதை தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.