மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மாநிலங்களுக்கு பிரதமர் மோடி இன்று சுற்றுப்பயணம்!

#India #Tamil Nadu #2023 #Tamilnews #NarendraModi
Mani
2 years ago
மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மாநிலங்களுக்கு பிரதமர் மோடி இன்று சுற்றுப்பயணம்!

பிரதமர் மோடி ராஜஸ்தானில் ரூ.7,000 கோடி, மத்திய பிரதேசத்தில் ரூ.19,260 கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார். ராஜஸ்தானில் சித்தூர்களுக்கு பயணம் மேற்கொள்ளும் பிரதமர், மெஹாசானா-பதிண்டா-குர்தாஸ்பூர் எரிவாயு குழாய் இணைப்பைத் தொடங்கி வைக்கிறார். அபு சாலையில் இந்துதாஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனம் அமைத்துள்ள சமையல் எரிவாயு நிரப்பு நிறுவனத்தை தொடங்கி வைக்கிறார்.

மேலும், ரூ.1,480 கோடி செலவில் அமைக்கப்பட்ட தாரா-ஜலவர்-தீன்தர் பிரிவின் நான்கு வழி தேசிய நெடுஞ்சாலையை பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். ரூ.11,895 கோடி மதிப்பில் மேம்படுத்தப்பட்ட டெல்லி-வதோதரா விரைவு சாலையை மத்திய பிரதேசத்தின் குவாலியரில் பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்.

மேலும் ரூ.1,880 கோடி மதிப்பிலான 5 சாலை திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார். பிரதமரின் அனைவருக்கும் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் ஊரக மற்றும் நகர்புறப் பகுதிகளில் கட்டப்பட்ட வீடுகள், ஜல் ஜீவன் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!