தொடர் மழையால் கபினி அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு!
#India
#Tamil People
#Rain
#2023
#Tamilnews
#ImportantNews
#River
Mani
2 years ago
கேரள மாநிலம் வயநாட்டில் கனமழை பெய்து வருவதால் கர்நாடகாவில் உள்ள கபினி அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. அணைக்கு முதற்கட்டமாக வினாடிக்கு 4,500 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று காலை 8,200 கன அடியாக அதிகரித்துள்ளது.
நீர்வரத்து அதிகரித்துள்ள போதிலும், காவிரியில் இருந்து தமிழகம்-கர்நாடகத்துக்கு நீர் திறப்பு அதிகரிக்கப்படவில்லை. நீர் திறப்பு அதிகரிக்காமல் தமிழகத்திற்கு வினாடிக்கு 3,179 கன அடி தண்ணீரை மட்டும் கர்நாடகா தொடர்ந்து திறந்து வருகிறது.