ஆசிய விளையாட்டு போட்டி; இந்தியாவிற்கு மேலும் ஒரு தங்கப்பதக்கம்!
#India
#sports
#2023
#Gold
#Player
#Sports News
#news
#AsiaCup
Mani
2 years ago
சீனாவின் ஹாங்சூ நகரில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டு போட்டிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதற்கு மத்தியில் இந்திய அணி தொடர்ந்து பதக்கங்களை குவித்து வருகிறது.
இந்நிலையில் ஸ்குவாஷ் ஆடவர் அணிகள் பிரிவில் இந்திய அணிக்கு தங்கப்பதக்கம் கிடைத்துள்ளது. இறுதிப்போட்டியில் பாகிஸ்தானை இந்திய அணி எதிர்கொண்டது.
சவுரவ் கோஷல், மங்கோகர் மகேஷ் ஆகியோர் அடங்கிய இந்திய அணி, பாகிஸ்தான் அணிக்கு எதிராக பலப்பரீட்சை நடத்தியது. போட்டி மிகவும் விறுவிறுப்பாக இருந்தது. இந்திய அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று தங்கப்பதக்கத்தை உறுதி செய்தது. இதன் மூலம் இந்தியாவின் தங்கப் பதக்கங்களின் எண்ணிக்கை தற்போது 10 ஆக உயர்ந்துள்ளது.