இலங்கையின் துறைமுகங்கள், விமான நிலையங்கைள பாதுகாக்க அமெரிக்கா உறுதி!
#Lanka4
#Tamilnews
#sri lanka tamil news
#julie chung
Thamilini
2 years ago
இலங்கையின் துறைமுகங்கள் விமானநிலையங்களை பாதுகாப்பது குறித்து அமெரிக்கா அர்ப்பணிப்புடன் உள்ளதாக அமெரிக்க தூதுவர் ஜூலி சங் தெரிவித்துள்ளார்.
இது குறித்து ருவிட்டரில் கருத்து வெளியிட்டுள்ள அவர், அமைச்சர் நிமால்சிறிபால டி சில்வாவை தான் சந்தித்து பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டதாக தெரிவித்துள்ளார்.
இந்த சந்திப்பின் போது இலங்கையின் துறைமுகங்கள் விமானநிலையங்களின் அபிவிருத்தி குறித்து ஆராய்ந்ததாகவும், இவை இலங்கையின் வர்த்தக மற்றும் தனியார் துறையினரை முன்னிறுத்திய அபிவிருத்திகளிற்கு அவசியமானவை என்றும் அவர் வலியுறுத்தினார்.
இலங்கையின் விமானப்போக்குவரத்து துறை, துறைமுகங்கள் போன்றவற்றின் வெளிப்படையான வளர்ச்சியை எளிதாக்குவதற்கும் பாதுகாப்பை உறுதிசெய்வதற்குமான அர்ப்பணிப்புடன் அமெரிக்கா உள்ளது எனவும் அவர் மேலும் கூறியுள்ளார். .