களுத்துறை நீதிமன்றில் 8 பேருக்கு மரண தண்டனை
#SriLanka
#Court Order
Prathees
2 years ago
களுத்துறை மேல் நீதிமன்றம் எட்டு பேருக்கு மரண தண்டனை விதித்துள்ளது.
2003 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 24 ஆம் திகதி அல்லது அதற்கு அடுத்த நாள் கூரிய ஆயுதங்களால் நபர் ஒருவரைக் கொன்ற சம்பவம் தொடர்பில் 08 சந்தேகநபர்களை குற்றவாளிகளாக அறிவித்து நீதிமன்றம் இந்த உத்தரவை வழங்கியுள்ளது.
இவர்களுக்கு களுத்துறை மேல் நீதிமன்ற நீதிபதி பிரதீப் அபேரத்ன மரண தண்டனை விதித்துள்ளார்.
ஏறக்குறைய 20 வருடங்கள் நீடித்த நீண்ட விசாரணையின் பின்னர் தீர்ப்பு வெளியாகும் வேளையில் களுத்துறை நீதிமன்றத்திற்கு முன்பாக பெருமளவான மக்கள் திரண்டிருந்தனர்.