ஜெர்மன் புறப்பட்டார் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க!
#SriLanka
#Ranil wickremesinghe
#Lanka4
#sri lanka tamil news
Thamilini
2 years ago
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு ஜேர்மனிக்கு சென்றுள்ளார்.
ஜனாதிபதி மற்றும் தூதுக்குழுவினர் இன்று (27.09) அதிகாலை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
ஜேர்மனியில் நடைபெறும் பேர்லின் உலகளாவிய கலந்துரையாடலில் பங்கேற்பதே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் விஜயத்தின் நோக்கமாகும்.
பேச்சுவார்த்தையின் முதல் நாள் தலைவர்களின் கலந்துரையாடல் அமர்வில் ஜனாதிபதி கருத்துக்களை வெளியிட உள்ளார்.
இந்த விஜயத்தின் போது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, ஜேர்மன் அதிபர் ஓலாஃப் ஷோல்ஸ் மற்றும் அந்நாட்டின் அரசியல் மற்றும் வர்த்தக தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தவும் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.