சுற்றுலா பயணிகளை 10 இலட்சமாக்கிய ரஷ்ய குடும்பத்தினர்!
#SriLanka
#Russia
#Lanka4
#sri lanka tamil news
Thamilini
2 years ago
இந்த வருடம் ஜனவரி மாதம் முதல் இன்று வரை இலங்கைக்கு வந்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையை பத்து இலட்சம் அடையச் செய்யும் வகையில் ரஷ்ய பிரஜை மற்றும் அவரது குடும்பத்தினர் இன்று (26.09) இலங்கை வந்துள்ளனர்.
அவர்களை வரவேற்கும் முகமாக இலங்கை சுற்றுலா ஊக்குவிப்பு பணியகம் கட்டுநாயக்க விமான நிலைய வருகை முனையத்தில் வைபவமொன்றை ஏற்பாடு செய்திருந்தது.
இலங்கைக்கு வந்த ரஷ்ய நாட்டவருடன் அவரது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளும் இருந்தனர். ரஷ்யாவில் இருந்து ஓமன் நாட்டுக்கு வந்த அவர்கள் பின்னர் மஸ்கட்டிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனார்.