கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டம் ஆரம்பம் - மக்கள் பிரதிநிதிகள் பலர் புறக்கணிப்பு

#SriLanka #Meeting #Kilinochchi #Lanka4 #Tamilnews #sri lanka tamil news
Kanimoli
2 years ago
கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டம் ஆரம்பம் - மக்கள் பிரதிநிதிகள் பலர் புறக்கணிப்பு

கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டம் ஆரம்பமான நிலையில் மக்கள் பிரதிநிதிகள் பலர் புரக்கணித்துள்ளனர். குறித்த கூட்டம் இன்று காலை 9 மணியளவில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் ஆரம்பமானது. இக்கூட்டத்திற்காக மக்கள் பிரதிநிதிகளிற்கான ஆசனங்கள் ஒதுக்கப்பட்டிருந்த நிலையில் எவரும் கலந்துகொண்டிருக்கவில்லை.

 குறித்த கூட்டத்தில், கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர், மாகாண அமைச்சுக்களின் செயலாளர்கள், பிரதேச செயலாள்கள், திணைக்கள தலைவர்கள், அதிகாரிகள், உத்தியோகத்தர்கள், பாதுகாப்பு தரப்பினர், பொலிசார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதன் போது, பல்வேறு விடயங்கள் கலந்துரையாடப்பட்டுள்ளது.

 தியாகி திலீபனின் நினைவேந்தல் நிகழ்வுகள் தாயக பகுதிகளில் இடம்பெற்று வரும் நிலையில், தமிழ்க் கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டிருக்கவில்லை என கூறப்படுகிறது. மேலும் சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் வெளிநாடு சென்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!