நீர்கட்டணத்தை இணையம் மூலம் அறவிட நடவடிக்கை!
#SriLanka
#Lanka4
#Tamilnews
#sri lanka tamil news
Thamilini
2 years ago
அடுத்த மாதம் முதலாம் திகதி முதல் அச்சிடப்பட்ட குடிநீர் கட்டணத்தை வழங்குவதற்குப் பதிலாக இணையத்தில் இலத்திரனியல் பில்லிங் முறையை ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
முதலில் தெரிவு செய்யப்பட்ட 04 ஒழுங்குமுறை பிரதேசங்களில் புதிய முறை ஆரம்பிக்கப்படவுள்ளது, அதன் பிரதிப் பொது முகாமையாளர் பியால் பத்மநாத தெரிவித்தார்.
இது குறித்து மேலும் கருத்து தெரிவித்த அவர்,"அக்டோபர் 1, 2023 முதல் வாடிக்கையாளருக்கு பில் செலுத்தும் முறையில் மாற்றத்தை ஏற்படுத்த முயற்சிக்கிறோம்.
சோதனை அடிப்படையில், கொழும்பு தெற்கு நகரம், கண்டி தெற்கு ஆகிய 4 பிராந்திய அலுவலகங்கள் தொடர்பாக ஆன்லைன் மின்னணு பில்லிங் முறையை தொடங்கவுள்ளோம். இந்த திட்டம் வரும் 2024 ஜனவரி 01 முதல் விரிவுப்படுத்துவோம்” எனத் தெரிவித்துள்ளார்.