வடமாராட்சி கிழக்கு நாகர்கோவில் நாகதம்பிரான் கோவில் மகோற்சவம்!
#SriLanka
#Jaffna
#Temple
#Festival
#Tamilnews
Mayoorikka
2 years ago
யாழ்ப்பாணம் வடமாராட்சி கிழக்கு நாகர்கோவில் ஸ்ரீ பூர்விக நாகதம்பிரான் கோவில் வருடாந்த அலங்கார உற்சவம் நேற்று காலை வெகு சிறப்பாக ஆரம்பமாகியுள்ளது.
தொடர்ந்து 11 தினங்கள் நடைபெறவுள்ள உற்சவங்களில் எதிர்வரும் முப்பதாம் திகதி 7ஆம் திருவிழாவான ஆலய வரலாற்றை கூறும் கப்பல் திருவிழா இடம்பெறவுள்ளது.
எதிர்வரும் முதலாம் திகதி ஞாயிற்றுக் கிழமை வேட்டைத் திருவிழாவும், 2ஆம் திகதி சப்பரத் திருவிழாவும், 3ம் திகதி சமுத்திர தீர்த்தமும், 4ஆம் திகதி புதன்கிழமை பட்டுத் தீர்த்த உற்சவமும் இடம்பெறவுள்ளன.