அனுராதபுரத்தில் கொலையில் முடிந்த மது விருந்து!
#SriLanka
#Anuradapura
#Lanka4
#Tamilnews
#sri lanka tamil news
Thamilini
2 years ago
அனுராதபுரம் சீப்புக்குளம் பகுதியில் இன்று (24.09) காலை நபர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த பகுதியில் உள்ள வீடொன்றில் சிலர் கலந்து கொண்ட மது விருந்தின் போதே இக்கொலை சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
விருந்தின் போது சண்டை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. பாதிக்கப்பட்டவர் அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரிகள் இருவருக்கும், இக் கொலைச் சம்பவத்திற்கும் இடையில் தொடர்பிருப்பதாக பொலிஸார் சந்தேகிப்பதுடன், இது குறித்த மேலதிக விசாரணைகளை மிஹிந்தலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.