அமெரிக்காவில் வணிக வளாகம் அருகே திடீரென மர்ம நபர் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 3 பேர் பலி
#Death
#United_States
#people
#world_news
#GunShoot
#Breakingnews
Mani
2 years ago
அட்லாண்டா நகரில் தென்மேற்கே இவான்ஸ் தெருவில் வணிக வளாகம் ஒன்று அமைந்துள்ளது. வணிக வளாகம் அருகே 2 மர்ம மனிதர்கள் திடீரென துப்பாக்கிச் சூடு நடத்தினர். கண்ணில் பட்டவர்களை எல்லாம் சரமாரியாக சுட்டனர்.
இந்த துப்பாக்கிச் சூட்டில் 17 வயது சிறுவன் உள்பட 3 பேர் சம்பவ இடத்திலேயே குண்டு பாய்ந்து இறந்தனர்.
இதுபற்றி தகவல் அறிந்ததும் போலீசார் உடனடியாக சென்று விசாரணையில் ஈடுபட்டனர். துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த ஒருவருக்கு 20 வயதும், மற்றொருவருக்கு 30 வயதும் ஆகும். எனினும், அவர்களை பற்றிய அடையாளங்களை போலீசார் வெளியிடவில்லை. தற்போது, துப்பாக்கிச் சூடு நடத்தியதற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.