நிந்தவூர் ஜும்மா பெரிய பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபையின் புதிய தலைவராக எம் ஏ எம் ரசீன் தெரிவு
#people
#Ampara
#President
#sri lanka tamil news
#Mosque
#Trustees
#Nindaur
Prasu
2 years ago
நிந்தவூர் ஜும்மா பெரிய பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபையின் புதிய தலைவராக உதவி கல்வி பணிப்பாளர் எம் ஏ எம் ரசீன் ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
நிந்தவூர் ஜும்மா பெரிய பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபையின் முன்னாள் செயலாளராக இருந்து அர்ப்பணிப்புடன் சிறப்பாக பணியாற்றிய இவர் சமூக பற்றும் சிந்தனையும் மிக்கவராவார்.
இவரது தெரிவு குறித்து ஜமாத்தார் மகிழ்ச்சி தெரிவித்துள்ளதுடன் புதிய தலைவருக்கு பூரண ஒத்துழைப்பு வழங்கப் போவதாகவும் தெரிவித்துள்ளனர்.
இன்று கூடிய நிந்தவூர் ஜும்மா பெரிய பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபையின் உறுப்பினர்களில் 28 பேர் புதிய தலைவராக உதவி கல்விப் பணிப்பாளர் எம் ஏ எம் ரசீன் அவர்களை ஏகமனதாக தெரிவு செய்த போது இரண்டு உறுப்பினர்கள் மாத்திரமே இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.