டெல்லியில் மதியம் திடீரென கனமழை பெய்ததால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியது

#India #Delhi #Rain #Breakingnews
Mani
2 years ago
டெல்லியில் மதியம் திடீரென கனமழை பெய்ததால்  வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியது

டெல்லியில் கடந்த வாரம் வரை கடும் வெப்பம் நீடித்து வந்ததால் மக்கள் கடும் வெப்பத்தால் பாதிக்கப்பட்டனர். இருப்பினும், இன்று மதியம் திடீரென்று மழை பெய்து உள்ளது. இதனால், ஆர்.கே. புரம், லோக் கல்யாண் மார்க் மற்றும் இந்தியா கேட் பகுதி உள்பட பல்வேறு பகுதிகளில் மழைப்பொழிவு காணப்பட்டது.

இதனால், வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் ஏற்பட்டது. இந்தியா கேட் அருகே கார், ஆட்டோ, ஸ்கூட்டர்களில் சென்றவர்கள் மழையில் நனைந்தனர். மழை காரணமாக மேகமூட்டத்துடன் வானிலை நிலவியது. இதனால், வாகனங்கள் முகப்பு விளக்குகளை ஏற்றிய நிலையில் சென்றன.

மகாராஷ்டிரா மாநிலத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழையால் பல்வேறு இடங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. இதனால், நாக்பூர் நகரின் அம்பஜாரி ஏரி பகுதியில் வீடு ஒன்றில் வெள்ள நீர் புகுந்து பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது.

இதனால், வீட்டில் வசிக்கும் முதியோர்கள் பலர் வெள்ளத்தில் மூழ்கினர். இந்த தகவல் கிடைத்ததும் தேசிய பேரிடர் மீட்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். இதில், 6 பேரை மீட்பு குழுவினர் பாதுகாப்பாக மீட்டு வெளியே கொண்டு வந்தனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!