திருச்சி-குஜராத் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயங்கர தீ விபத்து

#India #Train #fire #Breakingnews
Mani
2 years ago
திருச்சி-குஜராத் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயங்கர தீ விபத்து

தமிழ்நாட்டின் திருச்சியில் இருந்து குஜராத் மாநிலத்தின் ஸ்ரீகங்கா நகர் வரை ஹம்சபர் விரைவு ரயில் இயக்கப்பட்டு வருகிறது. வழக்கம் போல் திருச்சியில் இருந்து புறப்பட்ட இந்த ரயில் இன்று மதியம் சுமார் 2 மணியளவில் குஜராத் மாநிலம் சூரத்தில் இருந்து 25 கி.மீ. தொலைவில் உள்ள வல்சத் ரெயில் நிலையத்தை அடைந்தது.

மீண்டும் அங்கிருந்து புறப்பட்டு சென்று கொண்டிருந்தபோது அந்த ரெயிலின் ஒரு பெட்டியில் இருந்து திடீரென புகை வெளியேறியது. பின்னர் கண் இமைக்கும் நேரத்தில் அந்த ரெயில் பெட்டி தீப்பற்றி எரிந்தது. தகவலறிந்த என்ஜின் டிரைவர் வேகமாக செயல்பட்டு ரயிலை நிறுத்தினார்.

ரயில் நின்றதை உணர்ந்த பயணிகள் உடனடியாக பெட்டியை விட்டு வெளியேறினர், இதனால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. தகவல் கிடைத்ததும் ரயில்வே அதிகாரிகள் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இருப்பினும் தீ விபத்துக்கான காரணம் இதுவரை தெரியவில்லை.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!