03 பல்கேரிய பிரஜைகள் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்த பிரித்தானியா!
#world_news
#Lanka4
#sri lanka tamil news
Thamilini
2 years ago
ரஷ்யாவுக்காக உளவு பார்த்ததாக ஐந்து பல்கேரிய பிரஜைகள் மீது பிரித்தானியா குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது.
மூன்று ஆண்டுகளாக ரஷ்யாவுக்காக உளவு பார்த்ததாக சந்தேகிக்கப்படும் ஐந்து பல்கேரிய பிரஜைகள் மீதே இவ்வாறு குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அரசின் பாதுகாப்பு மற்றும் நலனுக்கு பாதகமான நோக்கத்திற்காக எதிரிக்கு நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ பயனுள்ள தகவல்களை சேகரிக்க சதி செய்ததாக அவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
2020 ஓகஸ்ட் மற்றும் 2023 பெப்ரவரிக்கு இடையில் நடந்ததாகக் கூறப்படும் இந்த குற்றச்சாட்டுக்களில் மூன்று ஆண்களும் இரண்டு பெண்களும் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.