யாழ்ப்பாணத்தில் 33 வருடங்களுக்கு பின்னர் விடுவிக்கப்பட்ட ஆலயம்!
#SriLanka
#Sri Lanka President
#Temple
Mayoorikka
2 years ago
யாழ்ப்பாணம் கட்டுவன் காசியம்பாள் சிறீ முத்துமாரி அம்மன் தேவஸ்தானம் கடந்த 1990ம் ஆண்டுக்கு பின்னர் 33 வருடங்களுக்கு பின்னர் ஆலயத்தை சென்று பார்வையிடுவதற்கும் ஆலய வழிபாட்டிற்கும் இராணுவத்தினர் அனுமதி வழங்கியிருந்தனர்.
கட்டுவன் காசியம்மாள் அம்மன் ஆலய தேவஸ்தானத்தினரால் முன்னாள் கல்வி இராஜாங்க அமைச்சர் விஐயகலா மகேஸ்வரனிடம் விடுத்த கோரிக்கைக்கு அமைவாக விஐயகலா மகேஸ்வரன் எடுத்த முயற்சியின் பயனாக குறித்த ஆலயத்தினை சென்று பார்வையிடுவதற்கு இராணுவத்தினர் அனுமதி வழங்கியிருந்த நிலையில் நேற்று மாலை இராணுவத்தினரின் அனுமதியுடன் உயர் பாதுகாப்பு வலயத்தில் உள்ள குறித்த ஆலயத்தினை சென்று பார்வையிட்டதோடு ஆலயத்தில் பூஜை வழிபாடுகளும் குருமார்களினால் முன்னெடுக்கப்பட்டது.