மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் அமைச்சர் ஹரீன்: வெளிநாட்டு சிகிச்சைக்கு பரிந்துரை
#SriLanka
#Harin Fernando
#Minister
Prathees
2 years ago
காணி மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோவை வெளிநாட்டில் மருத்துவ சிகிச்சை பெறுமாறு மருத்துவர்கள் பரிந்துரைத்துள்ளனர்.
முழங்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக அவர் பல நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதே இதற்குக் காரணம்.
அதன்படி அமைச்சர் மருத்துவ சிகிச்சைக்காக வெளிநாடு சென்றுள்ளார். முன்னதாக, முழங்காலின் நிலை காரணமாக பல தடவைகள் சத்திரசிகிச்சைக்கு உட்படுத்தப்பட்ட அவர், அந்த சத்திரசிகிச்சையில் இருந்து மீள்வதற்கு முன்னர், அமைச்சின் கடமைகளிலும் பங்குகொண்டார்.
அந்த நிலைகளால் மீண்டும் காயங்கள் ஏற்படுவதால், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிறகு, வெளிநாடு சென்று சிகிச்சை பெறுவது நல்லது என மருத்துவர்கள் பரிந்துரைத்துள்ளனர்.