தனுசு ராசியினருக்கு எதிர்காலம் குறித்த சிந்தனை மேலோங்கும் - இன்றைய ராசிபலன்

#Astrology #Rasipalan #Todayrasipalan #Dailyrasipalan
தனுசு ராசியினருக்கு எதிர்காலம் குறித்த சிந்தனை மேலோங்கும் - இன்றைய ராசிபலன்

மேஷம்

அசுவினி: முயற்சியில் இருந்த தடைகள் விலகும். பெரியோரின் ஆதரவு அதிகரிக்கும். பரணி: வியாபாரம் விருத்தியாகும். லாபம் அதிகரிக்கும். நீண்ட நாள் முயற்சி நிறைவேறும். கார்த்திகை 1: உறவினர்களுக்காக மேற்கொள்ளும் முயற்சி நிறைவேறும். உங்கள் செல்வாக்கு உயரும்.

ரிஷபம்

கார்த்திகை 2,3,4: முயற்சியில் எதிர்பார்த்த பலன்களை அடைய முடியாமல் போகும். அலைச்சல் அதிகரிக்கும். ரோகிணி: சந்திராஷ்டமம் தொடர்வதால் திட்டமிட்ட செயல்களில் பின்னடைவுகள் ஏற்படும். மிருகசீரிடம் 1,2: உங்கள் செயல்கள் கடும் முயற்சிக்குப்பின் நிறைவேறும். மனதில் இனம் புரியாத பயம் உண்டாகும்.

மிதுனம்

மிருகசீரிடம் 3,4: உங்கள் முயற்சிகளில் ஆதாயம் உண்டாகும். நண்பர்கள் உதவி கிடைத்து மகிழ்வீர்கள். திருவாதிரை: பிறரால் முடியாத ஒரு முயற்சியில் ஈடுபட்டு வெற்றி காண்பீர்கள். உங்கள் செல்வாக்கு உயரும். புனர்பூசம் 1,2,3: குடும்பத்தில் இருந்த சங்கடங்களை சரி செய்வீர்கள். எதிர்பார்த்த வரவு வந்து சேரும்.

கடகம்

புனர்பூசம் 4: ஆரோக்கியம் சீராகும். சுறு சுறுப்பாக செயல்படுவீர்கள். இழுபறியாக இருந்த ஒரு செயல் நிறைவேறும். பூசம்: முயற்சியில் வெற்றி காண்பீர்கள். வியாபாரத்தை விரிவு செய்வீர்கள். பிறரால் மதிக்கப் படுவீர்கள். ஆயில்யம்: போட்டியாளர்கள் பலமிழந்து போவார்கள். இழுபறியாக இருந்த விவகாரம் உங்களுக்கு சாதகமாகும்.

சிம்மம்

மகம்: குழந்தைகளுக்காக மற்ற வேலைகளை ஒதுக்கி வைப்பீர்கள். செயல்களில் தெளிவு உண்டாகும். பூரம்: உங்கள் செல்வாக்கு வெளிப்படும். சங்கடங்கள் தீரும். மற்றவர்களால் சாதிக்க முடியாத ஒன்றை சாதிப்பீர்கள். உத்திரம் 1: குடும்ப நலனில் அக்கறை செலுத்துவீர்கள். வருமானம் அதிகரிக்கும்.

கன்னி

உத்திரம் 2,3,4: அலைச்சல் அதிகரிக்கும். உங்கள் மனம் காட்டும் வழியில் சென்று நினைத்ததை அடைவீர்கள். அஸ்தம்: எதிர்பார்த்த செய்தி வரும். பிரிந்து சென்றவர்கள் மீண்டும் உங்களைத் தேடி வருவார்கள். சித்திரை 1,2: வரவுகளால் குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். மனதில் இருந்த சங்கடம் நீங்கும்.

துலாம்

சித்திரை 3,4: எதிர்பாலினர் உதவியுடன் நினைத்ததை அடைந்து மகிழ்வீர்கள். முயற்சி வெற்றியாகும். சுவாதி: துணிச்சலுடன் செயல்படுவீர்கள். வியாபாரத்தில் இருந்த நெருக்கடி நீங்கும். விசாகம் 1,2,3: எதிர்ப்புகளை சமாளித்து எதிர்பார்ப்புகளை நிறைவேற்றிக் கொள்வீர்கள். அந்நியரால் ஆதாயம் உண்டாகும்.

விருச்சிகம்

விசாகம் 4: எதிர்பார்த்த வரவு உண்டு. குழந்தைகளின் எதிர்கால நலனில் அக்கறை உண்டாகும். அனுஷம்: திட்டமிட்டு செயல்பட்டு வெற்றி காண்பீர்கள். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள். கேட்டை: கொடுத்து வைத்த பணம் வரும். குடும்பத்தில் இருந்த நெருக்கடி நீங்கும். எதிர்ப்புகள் விலகும்.

தனுசு

மூலம்: மனதில் தேவையற்ற குழப்பம் ஏற்படும். உங்கள் செயல்களில் தடுமாற்றமும் அலைச்சலும் உண்டாகும். பூராடம்: முயற்சியில் எதிர்பார்த்த நன்மையை அடைவீர்கள். பணியிடத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். உத்திராடம் 1: நீண்டநாள் பிரச்னை ஒன்றுக்கு தீர்வு காண்பீர்கள். எதிர்காலம் குறித்த சிந்தனை மேலோங்கும்.

மகரம்

உத்திராடம் 2,3,4: அலைச்சல் அதிகரிக்கும். செலவுகள் செய்தும் ஒரு முயற்சி நிறைவேறாமல் இழுபறியாகும். திருவோணம்: உங்கள் செல்வாக்கை காட்டுவதற்காக செலவு செய்வீர்கள். புதிய முயற்சியை ஒத்தி வையுங்கள். அவிட்டம் 1,2: உங்கள் எதிர்பார்ப்பு நிறைவேறும். வாழ்க்கைத் துணையுடன் ஏற்பட்ட பிரச்னை விலகும்.

கும்பம்

அவிட்டம் 3,4: இழுபறியாக இருந்த முயற்சி வெற்றியாகும். குடும்பத்தில் இருந்த நெருக்கடி நீங்கும். சதயம்: பழைய முதலீட்டில் இருந்து இன்று லாபம் வந்து சேரும். குடும்பத்தினர் உங்களைப் புரிந்து கொள்வார்கள். பூரட்டாதி 1,2,3: எதிர்பார்த்த வரவுகள் வந்து சேரும். குடும்பத்தில் இருந்த சங்கடங்கள் விலகும்.

மீனம்

பூரட்டாதி 4: வியாபாரத்தில் ஏற்பட்ட தடைகள் விலகும். உங்கள் எதிர்பார்ப்பு இன்று நிறைவேறும். உத்திரட்டாதி: குடும்பத்தில் உண்டான நெருக்கடியை சரி செய்வீர்கள். உறவினர்களின் ஒத்துழைப்பு உண்டு. ரேவதி: உங்கள் மனதில் புதிய சிந்தனை உருவாகும். தொழிலில் எதிர்பார்த்த லாபம் உண்டாகும்.

மேலும் மரண அறிவித்தல்களுக்கு