புதுச்சேரியில் ஒருவருக்கு நிபா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என தகவல்
#India
#Tamil People
#2023
#Tamilnews
#Breakingnews
#ImportantNews
#Scientist
#Virus
Mani
1 year ago

கடந்த சில நாட்களாக கேரளாவில் நிபா வைரஸால் 2 பேர் உயிரிழந்துள்ளனர், மேலும் பலர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து, மாநில சுகாதாரத் துறை தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும், தற்போது வைரஸ் பரவல் கட்டுக்குள் இருப்பதாகவும் அறிவித்துள்ளது.
இந்நிலையில் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் ஒருவருக்கு நிபா வைரஸ் பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பரிசோதனையில் நிபா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக ஜிப்மர் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், ஜிப்மர் மருத்துவமனைக்கு வருபவர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என ஜிப்மர் மருத்துவமனை நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.



