கேந்திரிய வித்யாலயா பள்ளி முதல்வர் மீது போலி சான்றிதழ் மூலம் மாணவர்களை சேர்த்ததாக சிபிஐ வழக்கு

#India #School #government #2023 #Breakingnews #ImportantNews #Principal
Mani
2 months ago
கேந்திரிய வித்யாலயா பள்ளி முதல்வர் மீது போலி சான்றிதழ் மூலம் மாணவர்களை சேர்த்ததாக சிபிஐ வழக்கு

விசாகப்பட்டினத்தில் உள்ள கேந்திர வித்யாலயா பள்ளியில் போலி சான்றிதழ்கள் மூலம் மாணவர்கள் சேர்க்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது. இதையடுத்து, பள்ளியுடன் தொடர்புடைய கேந்திரிய வித்யாலயா சங்க மூத்த அதிகாரிகள் சம்பந்தப்பட்ட பள்ளியில் சி.பி.ஐ. அதிகாரிகள் உடன் சோதனை மேற்கொண்டனர்.

அப்போது மத்திய அரசு சார்பாக வழங்கப்படும் சான்றிதழ்களை பெற்றோர்களுடன் சேர்ந்து போலியாக தயாரித்து மாணவர் சேர்க்கை நடந்தது தெரிந்தது. இதனால் கடந்த கல்வியாண்டில் இருந்து மொத்தம் 193 மாணவர்கள் விதிமுறைகளை மீறி சேர்க்கப்பட்டுள்ளனர்.

இதற்காக பல லட்சம் ரூபாய் லஞ்சம் வங்கி கணக்குகளுக்கு கைமாறியதும் விசாரணையில் தெரிந்தது. கேந்திரிய வித்யாலயா பள்ளி முதல்வர் சீனிவாசா ராஜா மீது சி.பி.ஐ வழக்குப் பதிவு செய்து அதிகாரிகள் தற்போது விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் மரண அறிவித்தல்களுக்கு