இறக்குமதி கட்டுப்பாடுகள் தொடர்பில் வெளியான புதிய தகவல்!

#Sri Lanka #Sri Lanka President #Ranil wickremesinghe #Tamilnews #sri lanka tamil news #Import
Mayoorikka
2 months ago
இறக்குமதி கட்டுப்பாடுகள் தொடர்பில் வெளியான புதிய தகவல்!

தற்போது 279 பொருட்களுக்கு மட்டுமே இறக்குமதி கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக பதில் நிதியமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

 முன்னதாக, அந்நிய செலாவணி தட்டுப்பாடு காரணமாக 1,467 இறக்குமதி பொருட்கள் தடை செய்யப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

 ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வலுவான பொருளாதார சீர்திருத்த நிகழ்ச்சி நிரலுக்கு அமைய, கடந்த வருடத்தில் இலங்கையில் பணவீக்கம் 66.7 சதவீதத்திலிருந்து 4.6 சதவீதமாக குறைந்துள்ளதாக நிதியமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

 ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

மேலும் மரண அறிவித்தல்களுக்கு