அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனை சந்தித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க!

#SriLanka #Sri Lanka President #America #Ranil wickremesinghe #Tamilnews #sri lanka tamil news
Mayoorikka
8 months ago
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனை சந்தித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க!

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுக்கும் இடையிலான சந்திப்பு நியூயோர்க்கில் இடம்பெற்றது.

 ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 78 ஆவது கூட்டத்தொடரில் பங்குபற்றிய அனைத்து நாட்டுத் தலைவர்களுக்கும் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் வழங்கிய இரவு விருந்துபசாரத்தின் போதே இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

 அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை மிகவும் சிநேகபூர்வமாக வரவேற்றதுடன், இடம்பெற்ற சிறு உரையாடலுக்குப் பின்னர், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் பேராசிரியர் மைத்திரி விக்ரமசிங்க ஆகியோர் பைடன் தம்பதிகளுடன் குழு புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.