உக்ரைனுக்கு ஆயுதங்கள் வழங்க மாட்டோம் : போலந்து அறிவிப்பு!
#world_news
#Tamil
#Ukraine
#War
#Lanka4
#Tamilnews
Dhushanthini K
1 year ago
தானிய இறக்குமதி தொடர்பில் ஏற்பட்ட கருத்து மோதல் காரணமாக உக்ரைனுக்கு ஆயுத விநியோகம் செய்யப்போவதில்லை என போலந்து அறிவித்துள்ளது.
இனி நவீன ஆயுதங்களை உருவாக்குவதில் தனி கவனம் செலுத்த இருப்பதாகவும் போலந்து பிரதமர் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் சபையில் உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ள கருத்துகள் ஏற்படுடையதாக இல்லை என குறிப்பிட்டு, செவ்வாய்க்கிழமை தங்கள் நாட்டுக்கான உக்ரைன் தூதரை அழைத்து போலந்து கடிந்து கொண்டதாகவும் செய்தி வெளியாகியுள்ளது.
உக்ரைனின் தானிய இறக்குமதிக்கு போலந்து உள்ளிட்ட ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் தடை விதித்துள்ளன. இந்நிலையில், இதற்கு எதிர்ப்பு தெரிவித்த உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் செலன்ஸ்கி காட்டமாக விமர்சித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.