இலங்கைக்கும் தமிழ்நாட்டிற்குமான கப்பல் சேவை குறித்து வெளியான தகவல்!

#SriLanka #Tamil Nadu #Kangesanthurai #Tamilnews #sri lanka tamil news #TamilNadu President #Ship
Mayoorikka
2 years ago
இலங்கைக்கும் தமிழ்நாட்டிற்குமான கப்பல் சேவை குறித்து வெளியான தகவல்!

தமிழ்நாடு நாகபட்டினத்திற்கும் இலங்கை காங்கேசன்துறைக்கும் இடையிலான பயணிகள் கப்பல் சேவை   எதிர்வரும் ஒக்டோபர் மாதம் முதல் இடம்பெறும் என்று கப்பல் போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.

 தமிழ்நாடு கடல்சார் சபை மற்றும் மத்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகள் அமைச்சகம் ஆகியவை இந்த படகுச் சேவையை ஆரம்பிக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளன.

 இதற்காக நாகப்பட்டினம் துறைமுகத்தில் துறைமுக கால்வாய் தூர்வாரப்பட்டு பயணிகள் முனையம் அமைக்கப்படுகிறது.

 ஒவ்வொரு படகும் சுமார் 150 பயணிகளை ஏற்றிச் செல்லும் வகையில் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. 

 இந்த படகுச் சேவை ஆரம்பிக்கப்பட்டால் அது இலங்கைத் தமிழர்கள் உட்பட இலங்கையர்களின் கல்வி, சுகாதாரம், வர்த்தகம் மற்றும் சுற்றுலாத்துறைக்கு இந்தச் சேவை பயனுள்ளதாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!