ஞானக்குழந்தை மலேசியா செல்வதற்கு நிதி உதவி வழங்கி வைப்பு!
#SriLanka
#Jaffna
#Malasia
#Tamilnews
#sri lanka tamil news
#Thiyagendran Vamadeva
Mayoorikka
2 years ago
மலேசியாவில் எதிர்வரும் டிசெம்பர் மாதம் நடைபெற உள்ள சர்வதேச போட்டியில் கலந்துகொள்ள இருக்கும் நமது ஞானக்குழந்தை அருணனுக்கு நிதி உதவி வழங்கப்பட்டுள்ளது.
உறுதியளித்தபடி முழுச்செலவின் ஒருபகுதியான ஒன்றரை லட்சம் ருபாவை நேற்றைய தினம் ( 20 / 09 /2023 ) ஏற்பாட்டாளர்களின் அறிவுத்தலுக்கு இணங்க முதற்கட்டமாக பெற்றோரூடாக ஏற்பாட்டாளர்கள் அறிவித்த வங்கிக் கணக்கிற்கு தியாகி அறக்கொடை நிறுவன தலைவர் தியாகி தியாகேந்திரன் வாமதேவா அவர்கள் அனுப்பினார்.
அத்துடன் சுதர்சன் அருணன் திறமையான பிள்ளை, நிச்சயமாக அனைவருக்கும் பெருமைதேடித் தருவான் என தான் நம்புவதாகவும், பலதுறைகளிலும் சிறந்து விளங்கும்படியாக அர்ப்பணிப்புடன் பிள்ளையை வளர்க்குமாறும் பெற்றோருக்கு ஆலோசனையும் வழங்கினார் .