உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியின் ஜெர்சி வெளியிடப்பட்டுள்ளது

#India Cricket #Cricket #WorldCup #2023 #match #Breakingnews #ImportantNews
Mani
9 months ago
உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியின் ஜெர்சி வெளியிடப்பட்டுள்ளது

இந்தியாவில் வரும் அக்டோபர், நவம்பர் மாதங்களில் 50 ஓவர் உலகக்கோப்பை தொடர் நடைபெற உள்ளது. இந்த தொடரில் இந்தியா, பாகிஸ்தான், இங்கிலாந்து, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா என மொத்தம் 10 அணிகள் பங்கேற்கின்றன. உலகக் கோப்பை தொடரின் தொடக்க ஆட்டத்தில் இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதும் ஆட்டம் அகமதாபாத்தில் நடைபெறுகிறது.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இந்தியாவின் தொடக்க ஆட்டம் அக்டோபர் 8-ம் தேதி சென்னையில் நடக்கிறது.

இந்த நிலையில் உலக கோப்பை தொடருக்கான இந்திய அணியின் ஜெர்சி வெளியிடப்பட்டுள்ளது. இந்திய அணியின் உலகக் கோப்பை ஜெர்சியை அடிடாஸ் நிறுவனம் வடிவமைத்துள்ளது.