மாரடைப்பால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

#SriLanka #Lanka4 #sri lanka tamil news #Heart Attack
Thamilini
2 years ago
மாரடைப்பால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

மாரடைப்பு மற்றும் நீரிழிவு நோயினால் உயிரிழக்கும் இளம் வயதினரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் மரண விசாரணை அதிகாரி சட்டத்தரணி இரேஷா சமரவீர தெரிவித்துள்ளார்.  

கடந்த 3 மாதங்களில் இலங்கையில் 50 வயதுக்குட்பட்ட 100 பேர் மாரடைப்பு மற்றும் நீரிழிவு நோயினால் உயிரிழந்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். 

கொழும்பு தேசிய வைத்தியசாலையின் மரண விசாரணை நீதிமன்றத்தினால் கடந்த 3 மாதங்களில் மேற்கொள்ளப்பட்ட 1500 பிரேத பரிசோதனைகள் மூலம் இந்த தகவல் கிடைத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.  

அண்மைக்காலத்தில் ஏற்பட்ட திடீர் மரணங்களில் அதிகமானவை மாரடைப்பு காரணமாக ஏற்பட்டவை எனவும் இதில் இளைஞர்கள் உயிரிழக்கும் வீதம் அதிகரித்துவருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!