தனது அண்டை நாடுகள் மீது வழக்கு தொடரும் உக்ரைன்!

#Russia #Ukraine #Lanka4 #sri lanka tamil news
Thamilini
2 years ago
தனது அண்டை நாடுகள் மீது வழக்கு தொடரும் உக்ரைன்!

உக்ரைனில் இருந்து தானிய இறக்குமதிக்கு தடை விதிக்கப்பட்டதற்கு எதிராக ஐரோப்பிய ஒன்றிய அண்டை நாடுகள் மீது உக்ரைன் வழக்கு தொடர்ந்துள்ளது. 

 உலக வர்த்தக அமைப்பிடம் ஸ்லோவாக்கியா, போலந்து மற்றும் ஹங்கேரி ஆகிய நாடுகள் மீது உக்ரைன் முறைப்பாடு அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

இத்தகைய கட்டுப்பாடுகள் சர்வதேச கடமைகளை மீறும் செயலாகும் எனவும் உக்ரைன் குறிப்பிட்டுள்ளது. 

 இருப்பினும் தங்கள் நாட்டு மக்களின் பொருளாதாரத்தை பாதுகாக்கவே இவ்வாறான தடையை கொண்டுவந்துள்ளதாக அந்நாடுகள் விளக்கமளித்துள்ளன. 

ரஷ்யாவின் கடும் நெருக்கடி காரணமாக கருங்கடல் கப்பல் பாதை மொத்தமாக முடக்கப்பட்டுள்ள நிலையில், வேறு பாதுகாப்பான பாதையை உருவாக்கும் நெருக்கடிக்கு உக்ரைன் தள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!