நல்லூர் மகோற்சவம் : பக்தர்கள் தவறவிட்ட பொருட்களை பெற்றுக்கொள்ள வாய்ப்பு!

#SriLanka #Nallur #Lanka4 #sri lanka tamil news
Thamilini
2 years ago
நல்லூர் மகோற்சவம் : பக்தர்கள் தவறவிட்ட பொருட்களை பெற்றுக்கொள்ள வாய்ப்பு!

நல்லூர் கந்தசுவாமி ஆலய மகோற்சவ திருவிழாக்களின்போது பக்தர்கள் தவறவிட்ட பெறுமதியான பொருட்கள், யாழ், மாநகர சபையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும், உரியவர்கள் அதனை அடையாளம் காட்டி பெற்றுக்கொள்ள முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

இது குறித்த தகவலை யாழ் மாநகர சபை ஆணையாளர் ஜெயசீலன் தெரிவித்துள்ளார். 

பெறுமதி மிக்க குறித்த பொருட்களின் உரிமையாளர்கள். அவற்றை ஆதாரங்களுடன் உரிய அடையாளத்தை உறுதிப்படுத்தி பொருட்களை பெற்றுக்கொள்ள முடியும் என அவர் தெரிவித்துள்ளார். 

மாநகர சபையின் நிர்வாக கிளையில் பிற்பகல் 2.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை தவறவிடப்பட்ட பொருட்களைபெற்றுக்கொள்ள முடியும் என அறிவித்துள்ளார்.     

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!