இலங்கையின் பல பகுதிகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுப்பு!

#SriLanka #Lanka4 #sri lanka tamil news #Land_Slide
Thamilini
2 years ago
இலங்கையின் பல பகுதிகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுப்பு!

இலங்கையின் பலப்பகுதிகளில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

இதன்படி  காலி, களுத்துறை, மாத்தறை மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கு தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் மண்சரிவு அபாய எச்சரிக்கையை விடுத்துள்ளது. 

குறிப்பாக காலி மாவட்டத்தின் அல்பிட்டிய மற்றும் நாகொட பிரதேச செயலக பிரிவுகளுக்கும், களுத்துறை மாவட்டத்தின் பிரதேச செயலக பிரிவுகளுக்கும், தொடம்கொட, அங்கலவத்தை, மத்துகம, வல்லவிட்ட, தெஹியோவிட்ட, கேகாலை மாவட்டம், புலத்கொஹுபிட்டிய, யட்டியந்தோட்டை மற்றும் தெரணியகல ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

மேலும்  மாத்தறை மாவட்டத்தின் பஸ்கொட மற்றும் பிடபெத்தர பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கும், அஹெலியகொட பிரதேச செயலகப் பிரிவுக்கும் மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!