ஜோ பைடனின் வயது குறித்து கருத்து தெரிவித்த டிரம்ப்

#Election #America #President #Biden #Trump
Prasu
2 years ago
ஜோ பைடனின் வயது குறித்து கருத்து தெரிவித்த டிரம்ப்

அமெரிக்காவில் அடுத்த வருடம் அதிபர் தேர்தல் நடைபெறவிருக்கிறது. இதில் போட்டியிட முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் (77) மற்றும் தற்போதைய அதிபர் ஜோ பைடன் (81) ஆகியோர் களத்தில் இருக்கின்றனர். 

தேர்தல் நெருங்கும் நேரத்தில் பைடன் 82 வயதை நெருங்குவார் என்பதும் டிரம்ப் 78 வயதை நிறைவு செய்வார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், அமெரிக்காவில் வாக்காளர்களிடம் ஆங்காங்கே நடத்தப்படும் கருத்து கணிப்புகளில் பேட்டி காணப்படும் 3 பேரில் ஒருவர், ஜோ பைடனின் அதிக வயது குறித்தும், அதனால் அவரால் மீண்டும் அதிபராக திறம்பட செயல்பட முடியுமா என்பது குறித்தும் ஆழ்ந்த சந்தேகத்தை வெளிப்படுத்தி வருகின்றனர் என தெரிய வந்துள்ளது.

 "ஜோ பைடன் மிகவும் வயதானவராகி விட்டதாக நான் நினைக்கவில்லை. ஆனால் அவர் அப்பதவிக்கு திறனில்லாதவர்; அதுதான் மிக பெரிய பிரச்சனை என நான் நினைக்கிறேன். 

எனது பெற்றோர் நீண்ட வயது உயிர் வாழ்ந்தனர். எனது மரபணுவில் அது உள்ளது. எனவே நான் வயதை ஒரு பொருட்டாக கருதவில்லை" என இது குறித்து ஒரு பேட்டியில் டொனால்ட் டிரம்ப் கூறினார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!