காணாமல் போன இளைஞரின் சடலம் தென்னந்தோப்பில் கண்டெடுக்கப்பட்டுள்ளது
#SriLanka
#Death
#Body
#Mullaitivu
Prathees
2 years ago
புதுக்குடியிருப்பு பகுதியில் உள்ள தென்னந்தோப்பில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் காணாமல் போன இளைஞனின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
குறித்த நபர் கடந்த புதன்கிழமை முதல் காணாமல் போயுள்ளதாக பொலிஸாருக்கு முறைப்பாடு கிடைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு, கோம்பாவில் பகுதியைச் சேர்ந்த 27 வயதுடைய இராசலிங்கம் சுதர்சன் என்ற இளைஞனே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சடலம் தொடர்பான நீதவான் விசாரணைகளின் பின்னர் சடலம் பிரேத பரிசோதனைக்காக முல்லைத்தீவு வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
இறப்பிற்கான காரணம் வெளியாகவில்லை, சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை புதுக்குடியிருப்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.