சட்டவிரோத மணல் அகழ்வு மேற்கொள்ளப்பட்ட இடங்களிற்கு அதிகாரிகள் கள விஜயம்
#SriLanka
#Arrest
#Police
#Lanka4
#Tamilnews
#sri lanka tamil news
Kanimoli
2 years ago
சட்டவிரோத மணல் அகழ்வு மேற்கொள்ளப்பட்ட இடங்களிற்கு அதிகாரிகள் கள விஜயம் மேற்கொள்ளப்பட்து.
கிளிநொச்சி மாவட்டத்தில் சட்டவிரோதமான மணல் அகழ்வு இடம்பெறுமிடங்களுக்கு மாவட்ட அபிவிருத்தி குழு தலைவரும், கடற்றொழில் அமைச்சருமான டக்லஸ் தேவானந்தாவின் பணிப்பின் பெயரில் உயர்மட்ட அதிகாரிகள் குறித்த பகுதிகளிற்கு நேரில் சென்று பார்வையிட்டுள்ளனர்.
இரணைமடு குளத்தின் ஆற்றுப்படுக்கைகளில் சட்டவிரோதமான முறையில் மணல் அகழ்வு இடம் பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்ட நிலையில், அவ்வாறான இடங்களை இனம் கண்டு சட்டவிரோத செயற்பாடுகளை தடுக்கும் வகையில் காவலரண்களை அமைக்க வேண்டிய இடங்களை அடையாளப்படுத்தி உள்ளனர்.