நாட்டை திவாலானதாக அறிவிப்பது பல மாதங்களின் சதி - அஜித் நிவார்ட் கப்ரால்
#SriLanka
#Ajith Nivat Cabral
#Dollar
#Lanka4
#Tamilnews
#sri lanka tamil news
Kanimoli
2 years ago
நாட்டை திவாலானதாக அறிவிப்பது பல மாதங்களின் சதி என்று மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் தெரிவிக்கின்றார். நாட்டின் பொருளாதார திவால்தன்மைக்கான காரணங்களைக் கண்டறிய நியமிக்கப்பட்ட நாடாளுமன்றத் தெரிவுக்குழு கூட்டத்தில் இது இடம்பெற்றுள்ளது.
இதேவேளை, இது தொடர்பில் புலனாய்வுப் பிரிவினரால் விசாரணை நடத்தப்பட வேண்டுமென தெரிவுக்குழு முன்னிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன தெரிவித்தார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் செயலாளர் நாயகம் சட்டத்தரணி சாகர காரியவசம் தலைமையிலான
பாராளுமன்ற தெரிவுக்குழு முன்னிலையில் இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் மற்றும் தற்போதைய ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன ஆகியோர் அழைக்கப்பட்டுள்ளனர்.