கொலை செய்துவிட்டு மகாவலி ஆற்றில் குதிக்கச் சென்ற நபர் கைது

#SriLanka #Police #Murder #Investigation
Prathees
2 years ago
கொலை செய்துவிட்டு  மகாவலி ஆற்றில் குதிக்கச் சென்ற நபர் கைது

கட்டுகஸ்தோட்டை மெனிக்கும்புர லேனில் உள்ள மூன்று மாடி வீடொன்றின் பாதுகாப்பிற்காக நியமிக்கப்பட்டிருந்த தனியார் பாதுகாப்பு உத்தியோகத்தர் கூரிய ஆயுதத்தால் வீட்டின் உரிமையாளரை தாக்கி கொலை செய்துள்ளார்.

 56 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தையே உயிரிழந்துள்ளார்.

 இன்று (16) அதிகாலை 5 மணியளவில் வீட்டின் உரிமையாளரை வீட்டுக்கு வெளியே வரவழைத்து கொலைச் செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

 அப்போது கூரிய ஆயுதத்துடன் மகாவலி ஆற்றில் குதிக்க முயன்ற போது அப்பகுதி மக்கள் அவரை பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

 உயிரிழந்தவரின் மனைவி மத்திய கிழக்கு நாடுகளில் பணிபுரிந்து வருவதாகவும், உயிரிழந்தவர் அந்த வீட்டில் தனியாக வசித்து வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

 கொலைக்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!