கிராம சேவை உத்தியோகத்தர்களின் கொடுப்பனவுகள் குறித்து ஆராய விசேட குழு நியமனம்!

#SriLanka #sri lanka tamil news #Tamil News
Thamilini
2 years ago
கிராம சேவை உத்தியோகத்தர்களின் கொடுப்பனவுகள் குறித்து ஆராய விசேட குழு நியமனம்!

கிராம சேவை உத்தியோகத்தர்களுக்கு வழங்கப்படும் கொடுப்பனவுகளை அதிகரிப்பது தொடர்பில் ஆராய விசேட குழுவொன்றை நியமிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் அசோக பிரியந்த வலியுறுத்தியுள்ளார். 

கொழும்பில் இன்று (16.09) இடம்பெற்ற மாநாட்டின் போதே இராஜாங்க அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.  

இதன்போது மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர், “மாவட்டச் செயலாளர்களுக்கான இரண்டு நாள் மாநாட்டில், கிராம நிர்வாக அலுவலர்களின் நிலவும் பிரச்சினைகள் குறித்து விரிவாகப் பேசப்பட்டுள்ளது. 

கிராம சேவை உத்தியோகத்தர்களின் தற்போதைய கொடுப்பனவுகளை அதிகரிப்பது தொடர்பில் விசேட குழுவொன்று நியமிக்கப்பட வேண்டுமென அங்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. 

அவர்கள் நீண்ட காலமாக தமது கொடுப்பனவுகளை அதிகரிக்குமாறு கோரி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது” எனக் கூறியுள்ளார். 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!