1.7 மில்லியன் பெறுமதியான சிகெரட் குச்சிகளுடன் பெண் ஒருவர் கைது!

#SriLanka #Arrest #Lanka4 #sri lanka tamil news
Thamilini
2 years ago
1.7 மில்லியன் பெறுமதியான சிகெரட் குச்சிகளுடன் பெண் ஒருவர் கைது!

கட்டுநாயக்கா பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவின் அதிகாரிகள், சிகரெட் குச்சிகளை  நாட்டிற்கு கடத்த முயன்றதாகக் கூறப்படும் இலங்கைப் பெண் ஒருவரைக் கைது செய்துள்ளனர். 

துபாயில் இருந்து வந்த குறித்த பெண் சட்டவிரோதமாக 17 ஆயிரம் சிகரெட் குச்சிகளை நாட்டிற்கு கொண்டுவந்ததாக தெரிவிக்கப்படுகிறது. இதன்பெறுமதி சுமார் 1.7 மில்லியன் எனத் தெரிவிக்கப்படுகிறது. 

கைது செய்யப்பட்ட பெண் புத்தளம் பகுதியைச் சேர்ந்த 55 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இந்த விடயம் குறித்த மேலதிக விசாரணைகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!