லக்னோவில் கூரை இடிந்து விழுந்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உயிரிழப்பு

#India #Death #2023 #Tamilnews #Died #ImportantNews
Mani
2 years ago
லக்னோவில் கூரை இடிந்து விழுந்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உயிரிழப்பு

உத்தரபிரதேச மாநிலம் ஆனந்த் நகர் பழைய ரயில்வே காலனியில் வீட்டின் மேற்கூரை திடீரென இடிந்து விழுந்ததில் விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும் தீயணைப்பு துறையினர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

இந்த விபத்தில், வீட்டின் உள்ளே இருந்த 3 குழந்தைகள் உட்பட 5 பேர் இடிபாடுகளில் சிக்கிக் கொண்டனர். இதையடுத்து அவர்களை மாநில பேரிடர் குழு மற்றும் உள்ளூர் போலீசார் இருவரும் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். மருத்துவமனையில் அவர்கள் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் இரங்கல் தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!