சேலம்-கோவை தேசிய நெடுஞ்சாலையில் கார் தீப்பிடித்து எரிந்தது, பயணிகள் உயிர் தப்பினர்
#India
#Accident
#2023
#fire
#Tamilnews
#ImportantNews
Mani
2 years ago

சேலம் - கோவை தேசிய நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை கார் சென்றுகொண்டிருந்தது. அந்த காரில் 2க்கும் மேற்பட்டோர் பயணித்தனர்.
அவிநாசி அருகே சென்றபோது, எதிர்பாராதவிதமாக கார் தீப்பிடித்து எரிந்தது. அதிர்ச்சியடைந்த டிரைவர், உடனடியாக வாகனத்தை நிறுத்தினார். இதையடுத்து அனைவரும் வேகமாக காரில் இருந்து இறங்கினர்.
இந்த சம்பவம் குறித்து தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது, தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து காரில் எரிந்த தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் கார் முழுவதும் தீக்கிரையானது. இருப்பினும் தீ விபத்தால் உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை. மேலும், சம்பவம் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.



