39 கொலைகளை செய்துள்ள கணேமுல்ல சஞ்சீவ: பொலிஸ் விசாரணைகளில் அம்பலம்

#SriLanka #Murder #Investigation #Crime
Prathees
2 years ago
39 கொலைகளை செய்துள்ள கணேமுல்ல சஞ்சீவ: பொலிஸ் விசாரணைகளில் அம்பலம்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்ட, நாட்டின் தலைசிறந்த பாதாள உலகக் கும்பல் தலைவர்களில் ஒருவராகக் கூறப்படும் கணேமுல்ல சஞ்சீவ, தனது கூட்டாளிகளை பயன்படுத்தி 39 கொலைகளை செய்துள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

 சில காலம் சிறையில் இருந்த கணேமுல்லே சஞ்சீவ, 2021ஆம் ஆண்டு பிணையில் விடுவிக்கப்பட்ட பின்னர் இரகசியமாக வெளிநாடு சென்றார்.

 வெளிநாடு சென்று 2 ஆண்டுகளில் 17 கொலைகள் செய்யப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

 மனிதக் கொலைகள் மட்டுமின்றி பாரியளவிலான போதைப்பொருள் கடத்தல், கப்பம் பெறுதல், கொள்ளை மற்றும் பல குற்றச்செயல்கள் இடம்பெற்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

 இந்த பாதாள உலக தலைவரின் கொலைகள் மற்றும் ஏனைய குற்றச்செயல்கள் தொடர்பில் பொலிஸார் தனியான விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

 கனேமுல்ல சஞ்சீவ போலி வெளிநாட்டு கடவுச்சீட்டில் இலங்கைக்குள் நுழைய முயன்ற போது கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!