ஆந்திராவில் வேன் மீது லாரி மோதிய விபத்தில் 5 பேர் பரிதாபமாக உயிரிழப்பு
#India
#Death
#Accident
#people
#Tamilnews
#Breakingnews
#AndhraPradesh
Mani
2 years ago

ஆந்திர மாநிலம் அன்னமய்யா மாவட்டம் பெத்தம்பள்ளி அருகே வேன் மீது லாரி மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர், மேலும் 11 பேர் காயம் அடைந்தனர். அவர்கள் உடனடியாக மருத்துவ உதவிக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
உயிரிழந்தவர்கள் கர்நாடக மாநிலம் பெலகாவியை சேர்ந்தவர்கள் என முதற்கட்ட தகவல் கிடைத்துள்ளது. இவர்கள் திருப்பதிக்கு திரும்பும் போது விபத்துக்குள்ளானது தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் குறித்து போலீசார் தற்போது விசாரணை நடத்தி வருகின்றனர்.



