அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 54 பேர் பரிதாபமாக உயிரிழப்பு
#Death
#Accident
#world_news
#2023
#fire
#Tamilnews
#Vietnam
#Killed
Mani
2 years ago
வியட்நாம் நாட்டின் தலைநகர் ஹனொய் நகரில் 9 மாடிகளை கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இந்த அடுக்குமாடி குடியிருப்பில் நூற்றுக்கணக்கானோர் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில், நேற்று இரவு அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. வீடுகளில் தூங்கிக் கொண்டிருந்த ஏராளமானோர் தீயில் சிக்கிக் கொண்டனர்.
தீயணைப்பு மற்றும் மீட்புக் குழுவினர், அடுக்குமாடி குடியிருப்புக்கு விரைந்து சென்று, உடனடியாக தீயை அணைத்து, உள்ளே சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். ஆனால், இந்த தீ விபத்தில் 54 பேர் உயிரிழந்தனர். மேலும், பலர் படுகாயமடைந்தனர். விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.