பயங்கரவாதத்திற்கு எதிரான’ சட்டமூலத்தின் நகலை சமர்ப்பிக்குமாறு கோரிக்கை!
#SriLanka
#Lanka4
#sri lanka tamil news
Thamilini
2 years ago
அண்மையில் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கிய ‘பயங்கரவாதத்திற்கு எதிரான’ சட்டமூலத்தின் நகலை சமர்ப்பிக்குமாறு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு (HRCSL) ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
மேற்படி மசோதா, 2023 ஆம் ஆண்டு மார்ச் 17 ஆம் திகதிக்கு முன்னர் வர்த்தமானியில் வெளியிடப்பட்ட மசோதாவின் திருத்தப்பட்ட பதிப்பு என்பதை புரிந்து கொண்டதாக ஆணையம் கூறியுள்ளது.
மார்ச் 2023 இல் வர்த்தமானியில் வெளியிடப்பட்ட மசோதா மீதான தனது அவதானிப்புகள் மற்றும் பரிந்துரைகளையும் குறித்த குழு அனுப்பியுள்ளது.
புதிய பதிப்பின் நகலைப் பெற்றவுடன், திருத்தப்பட்ட மசோதா மீதான கூடுதல் அவதானிப்புகள் மற்றும் பரிந்துரைகளை அனுப்ப எதிர்பார்த்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.