இந்த ஆண்டும் சிறைகளில் நிரம்பி வழியும் கைதிகள் தினம் கொண்டாடப்பட்டது

#SriLanka #Arrest #Police #Lanka4 #sri lanka tamil news #Tamil News
Kanimoli
2 years ago
இந்த ஆண்டும் சிறைகளில் நிரம்பி வழியும் கைதிகள் தினம் கொண்டாடப்பட்டது

இந்த ஆண்டும் சிறைகளில் நிரம்பி வழியும் கைதிகள் தினம் கொண்டாடப்படுகிறது. சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்படக்கூடியவர்களின் மொத்த எண்ணிக்கை சுமார் 13,000 ஆக இருந்தாலும், நேற்றைய நிலவரப்படி 27,348 பேர் சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

 எவ்வாறாயினும், இந்த வாரம் முழுவதும் கைதிகளுக்காக பல்வேறு வேலைத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாக மேலதிக சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.

 அதன் கீழ், சிறையில் உள்ள கைதிகள் தங்கள் குடும்ப உறுப்பினர்களை சந்திக்கும் வாய்ப்பு சமீபத்தில் மீளவும் கிடைத்தது.

 கைதிகள் தின தேசிய விழா இன்று நீதி அமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்ஷ மற்றும் நீதி மற்றும் சிறைச்சாலை விவகார இராஜாங்க அமைச்சர் சட்டத்தரணி அனுராத ஜயரத்ன தலைமையில் கொழும்பு பொது நூலக வளாகத்தில் நடைபெறவுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!