நாட்டை விட்டு வெளியேறினார் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க!
#SriLanka
#Ranil wickremesinghe
#Lanka4
#sri lanka tamil news
Thamilini
2 years ago
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கியூபா மற்றும் அமெரிக்காவுக்கான விஜயம் ஒன்றை மேற்கொள்வதற்காக இன்று (13.09) அதிகாலை நாட்டிலிருந்து புறப்பட்டுள்ளார்.
எமிரேட்ஸ் விமானமான EK-649 இல் கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து இன்று அதிகாலை 03.15 மணியளவில் டுபாய் நோக்கி ஜனாதிபதி மற்றும் அவரது குழுவினர் புறப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
துபாயில் இருந்து ஜனாதிபதி உள்ளிட்ட குழுவினர் மற்றொரு விமானத்தில் அமெரிக்கா செல்ல உள்ளனர்.
15ஆம் திகதி முதல் 16ஆம் திகதி வரை கியூபாவின் ஹவானாவில் ஜனாதிபதி உள்ளிட்ட குழுவினர் தங்கியிருப்பார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னர் எதிர்வரும் 19ஆம் திகதி முதல் 21ஆம் திகதி வரை அமெரிக்காவில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையின் 78ஆவது வருடாந்த அமர்வின் அரச தலைவர்கள் மாநாட்டில் உரையாற்றவுள்ளார்.