ஆபாச படம் குறித்து கேரளா உயர்நீதிமன்றம் விடுத்த தீர்மானம்

தனிமையில் இருக்கும் போது, மற்றவர்களுக்கு காண்பிக்காமல் ஆபாச படம் பார்ப்பது ஒருவரின் தனிப்பட்ட விஷயம் என்பதால், அதில் எந்த தவறும் இல்லை என்று கேரளா உயர்நீதிமன்றம் தெரிவித்து இருக்கிறது.
இதுபோன்ற விஷயத்தை குற்றமாக அறிவிப்பது ஒருவரின் தனிப்பட்ட விஷயத்தில் தலையிடுவதாகவும், தனிப்பட்ட விருப்பதில் தலையிடுவதாக இருக்கும் என்று உயர்நீதிமன்றம் தெரிவித்து இருக்கிறது.
2016-ம் ஆண்டு காவல் துறையினர் 33 வயதான நபர் ஒருவர் சாலையின் ஓரத்தில் நின்றுக் கொண்டு தனது மொபைல் போனில் ஆபாச படம் பார்த்துக் கொண்டிருந்த போது கைது செய்து, அவர் மீது இந்திய தண்டனை சட்டம் 292-வது பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.
இந்த வழக்கில் நீதிபதி பி.வி. குன்ஹிகிருஷ்ணன் இந்த கருத்தை தெரிவித்து இருக்கிறார். வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர் தன் மீதான வழக்கை ரத்து செய்யுமாறு மனு தாக்கல் செய்து இருந்தார்.
இது தொடர்பான விசாரணையின் போது, ஆபாச படங்கள் காலம்காலமாக வழக்கத்தில் இருந்து வருகிறது. தற்போதைய டிஜிட்டல் யுகத்தில் அதனை குழந்தைகள் உட்பட அனைவராலும் இயக்க முடிகிறது என்று நீதிபதி தெரிவித்து இருக்கிறார்.



