பச்சை மிளகாயில் ஐஸ்கிரீம் ரோல் தயாரிக்கும் வியாபாரி

#SriLanka #Food #Lifestyle #Lanka4
Kanimoli
8 months ago
பச்சை மிளகாயில் ஐஸ்கிரீம் ரோல் தயாரிக்கும் வியாபாரி

சமையல் சார்ந்த வீடியோக்கள் இணையத்தளத்தில் அதிக பார்வையாளர்களையும், ரசிகர்களையும் பெற்றுவருகிறது. அந்த வகையில் ஓரியோபிஸ்கட், ரஸ்குல்லா, குலாப்ஜாமூன், பழங்களை பயன்படுத்தி செய்யப்படும் ஐஸ்கிரீம் ரோல் வீடியோ இணையத்தளத்தில் அதிகளவு பகிரப்பட்டு பார்வையாளர்களை குவித்து வருகிறது.

 அதேபோன்று தற்போது ரொம்பவே வித்யாசமான முறையில் பச்சைமிளகாயை பயன்படுத்தி தயாரிக்கப்படும் ஐஸ்கிரீம் ரோல் வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. ஒரு தெரு வியாபாரி அசாதாரண சமையலான புதிய வகையில், பச்சை மிளகாயை நறுக்கி, 

ருசியான பால் கிரீம் சேர்த்து பிரீஸர் பயன்படுத்தி ரோல்களாக மாற்றப்பட்டு, பச்சைமிளகாய் ஐஸ்கிரீம் ரோலை உருவாக்குகிறார். இறுதியில் பச்சைமிளகாய் துண்டுகள் ஐஸ்கிரீம் ரோல்களின் மேல் தூவி அழகுபடுத்தி வாடிக்கையாளருக்கு தருகிறார்.